அத்திக்கடவு – அவிநாசி திட்டம்; துவங்கியது வெள்ளோட்டம்!!
திருப்பூர் அத்திக்கடவு – அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தில் ஆரம்பக்கட்ட வெள்ளோட்டம் பார்க்கும் பணிகள் துவங்கின.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,657 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.திட்டப்பணி முழுமை பெற்ற நிலையில், பணியை மேற்கொள்ளும்எல் அண்டு டி நிறுவனத்தினரே அடுத்த ஐந்தாண்டுக்கு, திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து, பழுதுகளை சரிசெய்து செயல்படுத்துவர்.ஏறத்தாழ அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன்தினம், பவானி காலிங்கராயன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் நீரை இறைத்து, 2வது நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்பின் 3வது நீரேற்று நிலையம் என, படிப்படியாக வெள்ளோட்டம் பார்க்கப்படும்.நீர்வளத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘வெள்ளோட்டம் பார்க்கப்படும் பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறதா, தண்ணீர் செல்வதில் தடை எதுவும் ஏற்படுகிறதா என்பன உள்ளிட்ட தொழில் நுட்ப பிரச்னைகளை அறிந்து, பிரச்னை இருப்பின் அதை சரி செய்வர்.இவ்வாறு, ஒவ்வொரு பகுதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி, அடுத்த மாதம், இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரேற்று பணியில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு, அவை களையப்பட்ட பின் தான், அதிகாரபூர்வ வெள்ளோட்ட அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.