கன்னியாகுமாரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் உள்ள குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழித்தடத்தில் நாள் தோறும் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த அச்சத்துடன் நூற்றுக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். இப்பிரச்சனையை பெரியோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சிறியோர் குளத்தின் கரை உடைந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் படிக்கும் 6 ஆம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளார்:-
அனுப்புநர்,
E.M.எபிஷியா
D/O எபிஜான்ஷன்
6 ஆம் வகுப்பு
திட்டுவிளை,
கன்னியாகுமரி மாவட்டம்.
பெறுநர்,
மாவட்ட ஆட்சியாளர் அவர்கள்,
கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவில்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொருள். எனது பள்ளியின் எதிரில் அமைந்திருக்கும் குளத்தின் கரை சரி செய்ய
ஐயா,
நான் மேல் குறிப்பிட்டுள்ள முகவரியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பள்ளியின் எதிரில் அமைந்துள்ள குளதின் பக்கவாட்டு சுவர் இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.தினமும் பள்ளிவரும் குழந்தைகள் அதன் அருகே நடந்து செல்லும் நிலையில் பள்ளிக்குழந்தைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சாலை ஓரம் ஒதுங்கும் போது பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு ஆபத்து வரும் நிலை இருப்பதால் என் மனம் அச்சம் கொள்ளுகிறேன். எனவே இச்சிறுமியின் வெண்டுதலைக் கேட்டு நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாள். 23/2/2023
வியாழன். நன்றி ஐயா.
இக்குழந்தையின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா..?
என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தியாளர்
-L.இந்திரா வீரபாகு.