கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 பகுதிகள் உள்ளன https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதில் பேஸ் 1ல் B1 பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றத்துடன் உள்ளது மேலும் கொசுக்கள் மிகுதியாக காணப்படுகின்றன. இந்த பகுதியில் 250 க்கும் மேற்பட்ட வீடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சாக்கடை கால்வாய் இவ்வளவு மோசமாக பராமரிப்பு இல்லாமல் உள்ள காரணத்தினால் இங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் மற்றும் டெங்கு பரவ காரணமாக அமையும் என்று இந்த பகுதி மக்கள் அனைவரும் பயத்துடன் உள்ளனர். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து இந்த பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.