பயண தகராறில் பயணியின் ஆணுறுப்பை அறுத்து சாலையில் வீசிச்சென்ற பயங்கரம்… திருப்பூர் – தேனி பயணத்தில் பரிதாபம்.!
சக பயணியிடையே ஏற்பட்ட தகராறில் நடத்துனர் இருவரையும் கீழே இறக்கிவிட்டு செல்ல, மர்ம நபர் ஆணின் மர்ம உறுப்பை துண்டித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண். இவர் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்தவாறு கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த ஊர் செல்ல திருப்பூரில் இருந்து அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேருந்து பயணத்தில் அருணுக்கும் – அவர் அருகே இருந்த பயணிக்கும் இடையே தகராறு நடக்கவே, பேருந்து நடத்துனர் கொடுவாய் பகுதியில் இருவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, அருணின் ஆணுறுப்பை மர்ம நபர் அறுத்து வீசியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அருணை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் அருணின் செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.