பூதப்பாண்டி பேரூராட்சியில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தலைவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!!
பூதப்பாண்டி பேரூராட்சி ஆண்டித்தோப்பு ஜங்ஷனிலிருந்து ஈசாந்திமங்கலம் செல்லும் தொந்திக்கரை சாலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் செலவில் 10 மின்கம்பம் நட்டு அதில் மின்விளக்கு அமைத்து ஓளிரசெய்து மகத்தான மக்கள் பணியினை மேற்கொண்ட பூதப்பாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் P.ஆலிவர்தாஸ்,பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் S. அனில்குமார், கவுன்சிலர் திருமதி மெர்ஸி பாய், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு பொது மக்களின் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் மின் பணியினை நேர்த்தியாகவும் விரைவாகவும் செயல்படுத்திய பூதப்பாண்டி பேரூராட்சி மின் பணியாளர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.