எல்ஜி இஜி சீரிஸ் மூலம் மிகுந்த ஆற்றல் சேமிப்புகளை உணர்ந்துள்ளது வாட்டர் ஃபோர்ட் கிரிஸ்டல்!!

 எல்ஜி இஜி சீரிஸ் மூலம் மிகுந்த ஆற்றல்  சேமிப்புகளை உணர்ந்துள்ளது வாட்டர் ஃபோர்ட் கிரிஸ்டல்!!

கோயம்புத்துார், இந்தியா, மார்ச் 15,2023:

அயர்லாந்து வாட்டர்போர்டில் உள்ள வாட்டர்போர்ட் கிரிஸ்டல், ஆடம்பர கண்ணாடி தயாரிப்பு நிறுவனம், நவீனமயாக்கப்பட்ட தொழிற்சாலையில் எல்ஜி இஜி சீரிஸ் இஜி22வி கம்ப்ரஸரை தேர்வு செய்துள்ளது.

வாட்டர் போர்டு  கிரிஸ்டல் நிறுவனம், முன்பிருந்த ஏர் கம்ப்ரஸரை மாற்ற, அயர்லாந்தில் உள்ள எல்ஜியின் சேனல் பார்ட்னராக உள்ள ஏர்டெக் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அணுகியது.  நம்பகத்தன்மையும், மின்சிக்கனமும் கொண்ட புதிய 24 மணி நேரமும் இயங்கும் கம்ப்ரஸர் தேவைப்பட்டது. மிகவும் துல்லியமாக வடிவமைக்கும் கருவிகள் மற்றும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்ட கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் வாட்டர் போர்ட். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டர் போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்துக்கு கம்ப்ரஸர் சேவையாற்றி வரும் ஏர்டெக் கம்ப்ரஸர்ஸ், விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகு, புதிய எல்ஜி இஜி 22வி (மாற்றமிக்க வேகத்திறன்) ஏர்கம்ப்ரஸரை நிறுவ சிபாரிசு செய்து, 2021 ஏப்ரலில் நிறுவப்பட்டது.

வாட்டர்போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் பராமரிப்புத்துறை மேலாளர் டோனி எல்ஸ்டட் கூறுகையில், ” எல்ஜி இயந்திரத்தை நாங்கள் வாங்க முக்கிய காரணம், சந்தையில் முன்னியில் இருப்பதோடு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரவாதம், திறன் மேம்பாட்டினை கொண்டிருப்பது தான். எங்களது  எல்ஜி இஜி22வி தொடரானது, எவ்வித சிக்கலும் இல்லாமல் ஓராண்டுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிற பழமையான கம்ப்ரஷர்களைக் காட்டிலும், மின்சாரத்தின் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதோடு, அதன் விலையை இரண்டு ஆண்டுகளில் மீட்டுக் கொடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

வாட்டர்போர்ட் கிரிஸ்டல், மிகவும் நுட்பம் வாய்ந்த சிறப்பு தன்மை கொண்ட கண்ணாடி உற்பத்தியாளர். அயர்லாந்தின் வாட்டர்போர்ட் நகருக்கு பெயரிடப்பட்ட பின், 1783ம் ஆண்டில் ஜார்ஜ் மற்றும் வில்லியம் பென்ரோஸ் வாட்டர்போர்ட் இந்த கண்ணாடி நிறுவனத்தை தொடங்கினர். இந்த கம்பெனி, பாரம்பரிய பொருட்களுக்கு அடுத்து, உள் அலங்கார கண்ணாடி பொருட்கள், சொகுசான வாழ்வியல் அனுபவங்களுக்காகவும், பாட்டில்கள், டம்ளர்கள், மற்றும் அலங்கார கண்ணாடிகள், தட்டுக்கள், அலங்கார சேகரிப்புக்கான வடிவமைப்புகள், விளக்குகள்,  அலங்கார தொங்கு விளக்குகள், காகிதங்கள் மீதான எடைகள், விடுமுறை கால நகை வகைகள் மற்றும் பரிசு பொருட்களை உருவாக்கி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மண்டலத்தின் எல்ஜி நிறுவன மேலாளர் டெர்ரி மெக்கையர் பேசுகையில், ” வாட்டர் போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்தின் இதயமாக எல்ஜி யுனிட் அமைந்ததில் பெருமை கொள்கிறோம். உலகின் பிரபலமான துாய்மையான கண்ணாடி தயாரிப்பாளருக்கு, துல்லியமாக பொருட்களை தயாரிக்க உதவி செய்வதோடு, நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் சேமிப்பிலும் கைகொடுக்கிறோம். எல்ஜியில், எங்களது தொலை நோக்கு பார்வையே  எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். இஜி சீரிஸ், புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்த அணுகுமுறையால், எங்களது வாடிக்கையாளர்களுக்கு திறம்பட உதவ முடிகிறது. குறைந்த வாழ்நாள் சுழற்சி கட்டணம், சுற்று சூழல் மாசின்மை போன்றவைகளும் எங்ளது சிறப்புகளாகும். காப்புரிமை தொழில்நுட்பம் பெற்ற இஜி சீரிஸ், உயர்ந்த செயல்திறனும், சந்தை முன்னணி வாரண்டி போன்றவை இந்த கம்ப்ரஸரை நிலை பெறச் செய்யும்.”

இஜி சீரிஸ் கம்ப்ரஸரின் அழகிய வடிவமைப்பு, உயர்ந்த வெப்பநிலையிலும் இயங்கும் விதத்தில் உள்ளது. குளிர்விலிருந்து அதிக வெப்பம், ஈரப்பதமான நிலையிலும் உலர்வு போன்றவை, ஏர் கம்ப்ரஸர் அமைப்பின் மேம்பட்ட நம்பிக்கையை தருகிறது. எல்ஜி யின் உயர் செயல்திறன், குறைந்த ஓட்டும் முதல் அதிக வேகவத்திற்கும், 4/5 லோப் அமைப்பிலும் திறம்பட செயல்படும். அழுத்த இழப்புகளை தவிர்க்க தனித்துவமிக்க வடிவமைப்பு, எண்ணெய் நீக்கும் அமைப்பு, 3 அடுக்கு பிரிப்பான்கள் சிறப்பான ஆற்றல் சேமிப்பை அளிக்கிறது.

வாட்டர்போர்ட் கிரிஸ்டல் டோனி எல்ஸ்டேட், ” ஏர்டெக் கம்ப்ரஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை பங்குதாராக செயல்பட்டு வருகிறது. அவர்களது நிபுணத்துவம், அறிவுசார்பு மற்றும் சிபாரிசுகள் எங்களது கம்ப்ரஸர் அமைப்பின் செயல் திறனை உயர்த்தியுள்ளது. எங்களது எதிர்பார்ப்புக்கும் மேலாகவே அவர்களது செயல்பாடுகள் உள்ளன,” என்றார்.

அயர்லாந்தின் கோர்க்கில் உள்ள ஏர்டெக் கம்ப்ரஷர்ஸ், நாடுதழுவிய சேவையை ஆண்டு முழுவதும், வாரம் முழுவதும், 24 மணி நேரமும் எல்ஜியுடன் 2020 முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஏர்டெல் கம்ப்ரசர்கள் பொது மேலாளர் ஜான் ஓ டிரிஸ்கோல், ” 24/7 மணி நேரமும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதால், நீண்ட கால, விசுவாசமானவாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடனான சேவை/ பொறியியல் அணி, அனைத்து பிராண்ட் கம்ப்ரஸர்களிலும் அனுபவம் பெற்றவர்கள். அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட விற்பனை குழு, ஆரோக்கியமான பாதுகாப்பு குழு, தரமான காற்றழுத்த குழுக்களைக் கொண்ட எங்களதுநிறுவனம், அயர்லாந்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சேவை செய்ய தயாராக உள்ளது,” என்றார்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp