கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது இந்த சூழ்நிலையில் இன்று மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை மழை பெய்தது.
இதனால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் குளிர்ச்சிகரமாகவும் வெயிலினால் வறண்டு போயிருந்த பூமி ஈரப்பதமாகவும் மாறி உள்ளதால் வால்பாறையை சுற்றியுள்ள பொதுமக்களும் எஸ்டேட் தொழிலாளர்களும் வாகன ஓட்டுனர்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.