கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர், மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு, கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் தாகத்தை தீர்த்து, களைப்பை போக்கும் வகையில், ஆண்டுதோறும் பாஜகவினர் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமைப்பது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக வடக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை மாவட்ட தலைவர் சென்னகேசவன் தலைமையில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய தலைவர் சரவணன் ஒன்றிய செயலாளர் ஆர் கனகராஜ் ஆர் திருமணி செல்வம் எம் காசி ராமு ஒன்றிய துணைத் தலைவர் ஜெய செல்வி ஒன்றிய பொருளாளர் கதிரவன் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் சிவபாரத் கமல் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் மாவட்ட செயலாளர் செந்தில் பிரபு மாவட்ட செயலாளர் ஹேமமாலினி வர்த்தக அணி ஒன்றிய தலைவர் எம் வேல்ராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடு ஒன்றிய பொதுச் செயலாளர் இ முத்தமிழ் செல்வன்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.