ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரத்தில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு நேற்று சின்னமாடு பூஞ்சிட்டு என இரு பிரிவாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டிகளை முன்னாள் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மனும் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான காந்தி என்ற காமாட்சி அவர்கள் தொடங்கி வைத்தார் . இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 12 ஜோடி களைகள் கலந்து கொண்டது. இதில் ஓட்டப்பிடாரம் சரண்யா குட்டி மாட்டு வண்டி முதலிடமும் பரிசு ரூபாய் 20001 தாழபுஷ்பம் வள்ளிநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். கே துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் மாட்டுவண்டி இரண்டாவது இடமும் பரிசு ரூபாய் 18001 பொன்முருகன் வழங்கினார். வள்ளிநாயகபுரம் காந்தி என்ற காமாட்சி மாட்டு வண்டி மூன்றாவது இடமும் பிடித்தன பரிசு ரூபாய் 16001 தர்மராஜ் விவசாயி வள்ளிநாயகிபுரம் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் 18 ஜோடி களைகள் கலந்து கொண்டது. இந்த பந்தயத்தை P. விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாமு நைனார்புரம் பவித்ரா மாட்டு வண்டி முதலிடத்தை யும் பரிசு ரூபாய் 10001 வீரலட்சுமி சந்தனராஜ் சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொட்டம்பட்டி வடக்கு வாச்செல்லியம்மன் துணை மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும் கூட்டுப் பண்ணை சின்னாண்டு நாயக்கர் மாட்டுவண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.