NALAIYA VARALARU
கோவை சிட்ரா ஆடிட்டோரியத்தில் இதயங்கள் அறக்கட்டளையின் 6ஆம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது!!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சேவை செய்து கொண்டு வரும் இதயங்கள் அறக்கட்டளை கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அமைந்துள்ளது.
அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமி நாதன் பேசுகையில், 2017ல்,10 குழந்தை களுடன் ஆரம்பிக்கப் பட்ட இதயங்கள் அறக் கட்டளை இன்று 1,100 குழந்தைகளை கவனித் துக்கொண்டிருக்கிறது. 7 மாத குழந்தைகள் முதல் 20 வயது உள்ள மாணவ,மாணவிகள் வரை தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இதயங்கள அறக்கட்டளை கேரளா, கர்நாடகா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் சேவை செய்வதாக தெரிவித்தார்.மற்றும் ஒரு மொபைல் டயாபடீஸ் கிளினிக் வாகனம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சென்று டைப் 1 டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு கண் பாதிப்பு,கிட்னி பாதிப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.மேலும் இவ்வாகனத்தில் அனைத்து இரத்த பரிசோதனையும் செய்து கொள்ளும் வசதி உள்ளதாக தெரிவித்தார். கிட்டத்தட்ட 10 அரசாங்க மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் இதன் மூலம் ஆயிரம் குழந்தைகள் பயன் அடைந்ததாக தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி பேசுகையில் முதல் வகை சர்க்கரை நோய் உள்ள இந்த குழந்தைகளையும் அவர்களது பெற்றவர்களையும் இதயங்கள் அறக்கட்டளை அறவணைத்து கொண்டுள்ளது. துன்பம் என்று வந்தவர்களை அன்புடன் அரவணைத்து ஊக்கப்படுத்துகின்றனர் என்றும் அனைவரின் சார்பாகவும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
இதில் ராசி விதை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்,புரொப்பெல் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வித்யா,சீனிவாசன்,சக்கரவேலு,ரவிக்குமார்,கிருஷ்ணமச்சாரி மற்றும் ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.