நாகை மாவட்டம், கீழையூர் வட்டாரம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு பணி மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத் அவர்களை திருப்பூண்டி பகுதியைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் (24.5.2023) அன்று இரவு 11.30 மணியளவில் அத்துமீறி நுழைந்து அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் ஹிஜாபை கழட்டு என்றும் உன் முகத்தை பார்க்க வேண்டும் நீ உண்மையிலேயே மருத்துவர் தானா என்று நான் சோதிக்க வேண்டும் என்று ஆபாசத்துடன் கண்ணிய குறைவாக பேசி செல்போன் மூலம் அவரது முகத்தை படம் பிடித்து இரவு நேரத்தில் மிரட்டப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த புவனேஸ்வர் ராம் என்பவர் பாஜக சங் பரிவார் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளுக்காக தொடர்ச்சியாக இந்த பகுதியில் சதி திட்டம் தீட்டி மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னால் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் SC துறையின் சார்பில் பிபிசி ஆவண திரைப்படத்தை திரையிட்டு மத்திய பா.ஜ.க மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரத்தை காங்கிரசார் நடத்திய போது அங்கே சில சமூக விரோதிகளை ஆயுதங்களுடன் திரட்டி வந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் ஆனால் அன்றைய தினம் காவல்துறையின் உரிய பாதுகாப்பு நடவடிக்கையால் அங்கே நடக்கவிருந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிற திருப்பூண்டி கிராம ஊராட்சியில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணியாற்றி மிரட்டலுக்குள்ளான மருத்துவர் ஜன்னத் அவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இன்று (25.5.2023 ) மாலை அனைத்து கட்சியினரும் பொது மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கீழையூர் காவல் துறையினர் குற்ற எண் 129 /2023 சட்ட பிரிவுகள் 294 (பி ) 353,298 மற்றும் 67 தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டபடி புவனேஸ்வர்ராம் மீது வழக்கு பதிந்துள்ளனர் ஆனால் இந்நேரம் வரை காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை பாரதிய ஜனதா கட்சியும் சில இந்து மத அடிப்படைவாத அமைப்புகளும் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள் எனவே நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை உடனடியாக பா.ஜ.க நிர்வாகி புவனேஸ்வர் ராமை கைது செய்வதுடன் அவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
என நாகப்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா கூறினார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.