மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு:
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் 2வது ரயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே 4வது ரயில்வே கேட் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் நாளை காலை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே நின்று சென்ற தூத்துக்குடி – திருநெல்வேலி, திருநெல்வேலி – தூத்துக்குடி பாசஞ்சர் ரயில்கள், தூத்துக்குடி- மனியாச்சி, மனியாச்சி – தூத்துக்குடி பாசஞ்சர் ரயில்கள் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவை, மைசூர் செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்தால் முக்கிய சாலையாக இருக்கும் 1ம் ரயில்வே கேட், 2ம் ரயில்வே கேட் சாலையில் போக்குவரத்து பெரிதும் குறைந்துவிடும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.