இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 02.06.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி ((Negotiable Instrument Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்..
நாளைய வரலாறு செய்திக்காக,
– முத்தரசு கோபிஶ்ரீ, வைகுண்டம்.