மே 26ம் தேதி மற்றும் ஜூன் 2ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து (01143) கோடை கால சிறப்பு ரயிலாக தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று தூத்துக்குடி இரயில் நிலையத்தில் இருந்து 28ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி (01144) ரயில் நிலையத்தில் இருந்து கோடைகால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
கோடை காலமான தற்போது விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படும் பயணிகளுக்கு இந்த கோடை கால சிறப்பு ரயில் வரப்பிராசதமாக அமைந்துள்ளது என்று பயணிகள் சங்க செயலாளர் பிரம்மநாயகம் ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.