தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் மேம்பாட்டு நிதியியல் ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை யை நேற்று மாலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
இவ்விழாவின் போது மேல்மாந்தை ஊராட்சி மன்றம் தலைவர், மல்லிகா முத்தையா சாமி ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளான பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.