கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவ மனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். வால்பாறை மற்றும் வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மக்களுக்கு ஏற்படும் உடல் நலக் குறைகளை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
வால்பாறையில் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல் நினைத்த இடத்தில் போட்டு வைத்து உள்ளார்கள் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளையே தரம் பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டலாமா? நோய் தொற்றுகள் பரவ இதுவும் ஒரு காரணமாக அமையலாமா? மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.