சூலுார் அடுத்த தென்னம் பாளையத்தில் இருந்து அன்னுார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அவிநாசி ரோட்டில் இருந்து பொன்னாண்டாம் பாளையம், சோளக்காட்டுப்பாளையம், வாகராயம்பாளையம், கரிச்சிபாளையம், சென்னப்பசெட்டி புதுார் வழியாக செல்லும் இந்த ரோட்டில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதனால், தினமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.
இந்த ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தென்னம்பாளையம் – அன்னுார் ரோட்டில் விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்துள்ளன. வெளியூரில் இருந்து வரும் கன ரக வாகனங்கள், இப்பகுதியில் உள்ள வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை மதிப்பதே இல்லை.
எதிர் எதிரே இரு வாகனங்கள் வரும்போது, ஒதுங்க கூட இடமில்லை. அதனால், விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்குகின்றனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து இரும்புதடுப்பு வைக்க வேண்டும், ” என்றனர்.
இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே மிகவும் அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் எனவே அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.