இன்வான் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஷீத் கதையெழுதி இயக்கியுள்ள படம் அழகான ராட்சஸிகள். கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா மற்றும் இவான் புரொடக்ஷன்ஸ் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் பிரபல தெலுங்கு திரையுலக நாயகி நேஹா ரேஷ்பாண்டே, ஃபெரா, மீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க வில்லனாக படத்தின் இயக்குனர் ரஷீத் நடித்துள்ளார். இந்நிலையில் அழகான ராட்சஸிகள் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர்கள் இலியாஸ், ஹரீஸ் ஷா மற்றும் இயக்குனர் ரஷீத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருப்பதாகவும்,அதனாலேயே எங்களது தயாரிப்பில் முதல் படைப்பாக தமிழ் படங்களை தயாரிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினர்.இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் ரஷீத், கோவையில் சில வருடங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும், படப்பிடிப்புகள் முழுவதும் கோவை, ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றதாக குறிப்பட்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் குரு விக்னேஷ், நடிகைகள் சஜனா, நந்தினி, கனிகா, அர்ச்சனா, ஆவியா உட்பட பலர் உடனிருந்தனர்.
-சீனி, போத்தனூர்.