தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குறுக்குச்சாலையில் கடையின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கே சண்முகபுரம் கிராமத்தைச் சார்ந்த நாகராஜ் வயது 33 என்பவர் காமாட்சி டிரேடர்ஸ் கட்டுமான பொருட்கள் அனைத்தும் அடங்கிய கடையை நடத்தி வருகிறார் நேற்று இரவு 10 மணி அளவில் கடைய அடைத்து விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் 9.30 மணி அளவில் நாகராஜ் கடையை திறந்து உள்ளார் அப்பொழுது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது பார்த்தார் பின்னர் கல்லாப்பெட்டியை சென்று பார்த்தபோது அதிலிருந்து ரூபாய் 50,000 திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன் குறுக்குச்சாலை டாஸ்மாக்கில் மர்ம நபர்கள் இரவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்யப்பட்டிருந்தது அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.