கோவை மருதமலை பகுதியில் தற்போது யானை கூட்டங்கள் முகாமிட்டு உள்ளன மருதமலை பகுதியில் அடிக்கடி யானைகள் உலா வருவதால் மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அதேபோன்று காலை வேலைகளிலும் மாலை வேலைகளிலும் மருதமலை அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று வீட்டின் முன்பக்க கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து உள்ளது இதை அந்த வீட்டின் உரிமையாளர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க கூறுகிறார் அப்போது அவருடைய மகள் குட்டி யானை எல்லாம் உள்ளது எனவே பட்டாசு வெடிக்க வேண்டாம் என வாஞ்சையோடு கூறுகிறார். இந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.