தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி உடனே பதவி விலக வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள்; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசைக் கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் பங்கேற்று பேசினார். உடன் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் கலந்து கொண்டார்.
கடம்பூர் ராஜ் அவர்கள் பேசியது:
செந்தில் பாலாஜி இன்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றால் அவருக்கு நல்லது இல்லை என்றால் அண்ணா நகர் ரமேஷ் சாதிக் பாஷா நிலைமை தான் வரும் என மக்களே பேசிக்கொள்கிறார்கள் நாங்கள் பேசவில்லை அமைச்சர் பி டி ஆர் ஆடியோ விவகாரம் இதனால்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விடியல் அரசு அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய தாலிக்கு தங்கம் திட்டம் பசுமை வீடு திட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் மானியம் ஆகியவை நிறுத்திவிட்டது எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.