தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 30ம் ஆண்டு அசன விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் சித.செல்லப்பாண்டியன், ஞான்ராஜ், ஆகியோர்கள் பங்கேற்பு. தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமணடலத்திற்குட்பட்ட சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 30ம் ஆண்டு ஆசனவிழா மற்றும் 73வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது.
அசன விழா நிகழ்ச்சியை குருத்துவ செயலாளர் சேகர குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக், உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி, ஆகியோர் ஜெபம் செய்து அசனவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் செயலாளர் ஜவஹர் சுந்தர்ராஜ், பொருளாளர் ஞானராஜ் டேனியல், அசன கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செயலாளர் ஜெய்சன் பொன்னுத்துரை, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆலய அசன விழா கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பினரும் அசன விருந்தில் பங்குபெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.