மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது கூட்டாளியாக இருந்தவர் செந்தில். இவருக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே தகராறு எழுந்ததாக தெரிகிறது. இதனால் செந்தில் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடியேறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாக செந்தில் தன் மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற நிலையில், கூட்டாளியான செந்தில் காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை இன்று கைது செய்தனர். சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் ரவுடியாக வலம் வந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் மீது என்கவுன்ட்டர் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் திருந்தி வாழ்வதாக காவல் துறையில் உறுதி அளித்தார்.
இதனிடையே அவர் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொணடு பொது இடங்களில் வலம் வருவார். இதன் மூலம் இவர் பிரபலமானார். கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி மட்டும் 128 சவரன் என சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்தார். இவர் எங்கு சென்றாலும் இவருடன் செல்பி எடுத்து வருகிறார்கள். இவர் தான் அணிந்திருக்கும் நகைகளுக்கு முறையாக வருமான வரி செலுத்தி வருவதாக சொல்கிறார். இவருடைய சொத்து மதிப்பும் பல கோடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வரிச்சியூர் செல்வம் பேட்டி அளிக்கையில், நான் ரவுடி இல்லை, நான் யாரிடமாவது ரவுடித்தனம் செய்து பணம் பெற்றதை பார்த்துள்ளீர்களா? எதற்காக என்னை ரவுடி என கூறுகிறீர்கள். என்னிடம் கத்தியை காட்டி யாராவது மிரட்டி நகைகளை கேட்டால் கொடுத்துவிடுவேன் என்றார். மேலும் காயத்ரி ரகுராம் , வரிச்சியூர் செல்வத்துடன் எடுத்த புகைப்படத்தை திருச்சி சூர்யா சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதனால் கோபமடைந்த வரிச்சியூர் செல்வம், திருச்சி சூர்யாவிடம் போன் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சம்பவமும் நிகழ்ந்தது. இவர் தற்போது வரிச்சியூரான் வகையறா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் மீது ஆள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
– தமிழரசன், மேலூர்.