வாஞ்சிநாதன் 112 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் அவர்களின் 112ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திரு.சுரேஷ் துணை வட்டாட்சியர் திரு.ஸ்டாலின் கிராம நிர்வாக அலுவலர் திருமதி.செல்வி, வருவாய் ஆய்வாளர் செல்வரேகா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜன், கொல்லங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.லதா முருகன், மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பிரேமா முருகன், கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாஞ்சி மணியாச்சி வரலாறு:

நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன். செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.

தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, ​​வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு அரசு வேலை . தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார். முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆசை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp