கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் சரியான தங்கும் விடுதி வசதி இல்லாமல் மிகவும் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது விடுதி வசதி இல்லாத காரணத்தால், அந்தந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு மனவேதனையும் மன அழுத்தமும் இல்லாமல் நல்ல சூழ்நிலையில் படிக்க தேவையான வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். எனவே வெளியூர்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கு தகுந்த விடுதி வசதியை ஏற்படுத்தி அவர்கள் நல்ல முறையில் படித்து உயர்வான நிலைமைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.