எட்டையபுரத்தில் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா!! அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவரின் 381-வது பிறந்த நாள் விழா நடந்தது.

சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவரின் 381-வது பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள உமறுப்புலவரின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.லட்சுமிபதி அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய் உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ

அணி அமைப்பாளர் சௌந்தரராஜன் பேரூராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M. R.முனியசாமி முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் வார்டு உறுப்பினர் குமார்,மணிகண்டன் வார்டு செயலாளர் சின்னப்பர், அருள்சுந்தர் மகளிர் அணி மஞ்சமாதா தேவி,முருகலட்சுமி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி மகளிர் பிரிவு முத்துமாரி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp