தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சார்ந்த முத்துச்சாமி மகன் சந்தனமாடசாமி(32) சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். தனது டிராக்டரில் விவசாய பணி செய்வதற்காக தனது தாய் ராஜேஸ்வரி(60), அதே ஊரை சேர்ந்த மாடசாமி மனைவி கோமதி(50), செல்வபாண்டி மனைவி சரஸ்வதி(60) ஆகியோருடன் மஞ்சநாயக்கன்பட்டி ஏ.வேலாயுதபுரம் விலக்கு அருகில் விவசாய பணி செய்வதற்காக டிராக்டர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த எட்டயாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் முந்தி செல்ல முயன்றது. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் பள்ளி வேன் உரசியது. இதில் நிலை தடுமாறி டிராக்டர் சாலை பக்கவாட்டில் உருண்டது. இதில் சந்தனமாடசாமி, கோமதி டிராக்டர் சிக்கி பரிதாபமாக உடல் நசங்கி உயிரிழந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரி, சரஸ்வதி படு காயங்களுடன் மீட்கபட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து எப்போதுவென்றான் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகமது, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிராக்டர் ஈடுபடுக்குள் சிக்கி உயிரிழந்த சந்தனமாடசாமி, கோமதி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் ஏ.வேலாயுதபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கியது. இறந்த சந்தனமாடசாமிக்கு முருகலட்சுமி என்ற மனைவியும் முகுந்த் என்ற ஆறு மாத குழந்தையும் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.