தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம் புதியம்புத்தூர் போலீசார் விசாரணை. ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் பகுதியில் இருந்து பணியாட்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில் உள்ள ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு மகேந்திரா வேன் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மகாத்மா பள்ளிக்கு திரும்பும் வழியில் விளக்கு அருகே புதியம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் (27) மகேந்திரா வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மகாத்மா பள்ளி சாலையில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதை அடுத்து வேனை ஓட்டிச் சென்ற மணிகண்டன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலைத்தடுமாறிகவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மற்றொரு வேனில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தில் டிரைவர் மணிகண்டன் உட்பட 12 பேருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் விபத்தில் டிரைவர் மணிகண்டன், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த தங்கமுனியம்மாள், லிங்கம்மாள், ஸ்ரீதேவி, சிலோன் காலணியைச் சேர்ந்த ராமலட்சுமி, கஜேந்திரன், தனலட்சுமி, கீழமுடிமனைச் சேர்ந்த சந்தனசெல்வி, சரஸ்வதி, நாகேஸ்வரி, சுந்தரி, ஆறுமுகத்தாய் ஆகியோரை சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.