கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஏ.வி.பி.எனும் ஆர்ய வைத்யா பார்மசி லிமிடெட் ஒரு முன்னணி ஆயுர்வேத நிறுவனமாக இந்தியா முழுவதும் அறியப்படும் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், தனது புதிய நுகர்வோர் வணிகப் பிரிவை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆர்ய வைத்யா பார்மசி ரிசர்ச் பவுண்டேஷனில்,நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,புதிய பொருட்களை ஏ.வி.பி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ தேவிதாஸ் வாரியர் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, தோல் பராமரிப்பு மற்றும் வலி நிவாரணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நுகர்வோருக்கான ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்த உள்ளதாகவும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆயுர்வேதம் மக்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் சக்தி கொண்டது என தெரிவித்தார். நோய் எதிர்ப்புச் சக்தி, வலி நிவாரணம், தோல், முகம், முடி பராமரிப்பு மற்றும் செரிமானப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் 12 ஆரோக்கிய தயாரிப்புகளை ஏ.வி.பி.புதிய வணிக பொருட்களாக தற்போது அறிமுகபடுத்தி உள்ளதாக கூறிய அவர், இந்த தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக கூறினார்… இது போன்ற புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உண்மையான ஆயுர்வேதத்தின் பயன்களை பொதுமக்கள் எளிமையாக பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதிய நுகர்வோர் வணிகப் பிரிவு, ஆயுர்வேதத்தின் பலன்களை அனைத்து மக்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் என ஏ.வி.பி.இன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ விபின் விஜய் கூறினார்.
-சீனி, போத்தனூர்.