தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் அவர்கள் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாடு முழுவதும் இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது அதன் தொடர்ச்சியாக கயத்தாரில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அவர்களுடைய வாரிசுகள் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மாலை அனைத்தும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை செப்டம்பர் 9 1799 ஆண்டு கைப்பற்றப்பட்டது பின்னர் புதுக்கோட்டை மன்னர் தொண்டைமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார் அக்டோபர் 16 1799 ஆம் ஆண்டு கயத்தாறு அருகில் தூக்கிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்வதற்கு முன்பே தமிழ்நாட்டில் துணிச்சலாக வரி கொடுக்க மறுத்து உழைப்பது நாம் விளைவிப்பது நாம் எதற்காக அவர்களுக்கு நாம் வரி கொடுக்க வேண்டும் என போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.