தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் மேற்கு ஒன்றியம், அயன்வடமலாபுரம் கிராமத்தில் கம்மவார் அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 200- பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கரிசில் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ஆண்டாள்தேவி, மாவட்ட பிரதிநிதி சோலைசாமி,
கிளைச்செயலாளர் கிருஷ்ணசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.