தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அருகில் புதியம்புத்தூரில் குப்பைக் கிடங்கில் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜைகள் நடைபெற்றது.
புதியம்புத்தூரில் இருந்து தட்டாப்பறை மற்றும் புதுக்கோட்டை வரை செல்லும் சாலையில் குப்பைக் கிடங்கு புதியம்புத்தூர் காவல் நிலையம் அருகில் உள்ளது. அங்கே தினந்தோறும் இந்த குப்பையில் தீப்பற்றுவதும் அதிலிருந்து புகை வருவதும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது.
இதைத் பற்றி செய்திகளும் பல வெளிவந்தன இதை அறிந்த ஓட்டப்பிடாரம் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் , பாஞ்சாயத்த தலைவர் இளையராஜா அவர்கள் புதியம்புத்தூர் தலைவர் பழனிசெல்வி ஆகியோர் இணைந்து இதற்கு தீர்வு காண குப்பைக் கிடங்கு சுற்றி சுவர் அமைக்க செந்த நிதியிலிருந்து ரூபாய் 13இலட்சம் ஒதுக்கீடு செய்தனர்.
இவ்விழாவில் வாலசமுத்திரம் பாஞ்சாயத்த து.தலைவர் அசோக் குமார் பள்ளி தாளாளர் நவநீதகிருஷ்ணன் குழந்தைவேலு மற்றும் திமுக பிரதிநிதிகள் வேல்ராஜ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.