தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கீழமுடிமன் பள்ளி மாணவர் மிதிவண்டி போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மிதிவண்டி போட்டி 14 .10 .23 அன்று நடைபெற்றது. புனித வளன் மேல்நிலைப் பள்ளி சார்ந்த முகேஷ் முதலிடம் பெற்று 5000, இரண்டாம் இடம் கார்த்திக் பெற்று 3000 . 15 வயதுக்குள் பிரிவில் வெற்றி பெற்றனர். 17 வயதிற்குள் பிரிவில் அஸ்வின் ராஜ் இரண்டாம் இடம் பெற்று 3000 ரூபாய் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் பரிசுகளை காண்பித்து, வாழ்த்துக்கள் பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.