பொள்ளாச்சியில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. பொள்ளாச்சி பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் இளைஞர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சி தேர் நிலை சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஜெயந்தி விழா நிகழ்ச்சிக்கு விழா ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் சார்பில் தேவர் பெருமகனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்தப்பட்டது. இதில் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம்.சுந்தர்ராஜ் ,தனலட்சுமி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பகுதியில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் அனைத்து சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டு தேவர் குருபூஜையை இனிப்பு வழங்கி திரளாக கொண்டாடினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இளைஞர் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
பொள்ளாச்சி நிருபர்,
-V. ஹரிகிருஷ்ணன்.