வால்பாறையில் பொதுமக்கள் குறை சொல்லும் அளவிற்கு மருத்துவத்துறை இருப்பதாக குற்றச்சாட்டு..! மருத்துவத்துறையை தரம் உயர்த்த அமைச்சரிடம் மனு!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தரம் உயர்த்த வேண்டும். எதிர்பாராத விதமாக உயிர் இழப்பு ஏற்படுகிறது இறந்தவர்களின் உடல் ஆய்வு கூறு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று வால்பாறை சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி பரமசிவம் வால்பாறைக்கு வருகை தந்துள்ள வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை மனுவில் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார  நிலையங்களிலும் போதிய அளவு மருத்துவர்களும் ஊழியர்களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் இப்பகுதியில் இருக்கும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அவர்கள் குடும்பமும் மிக வேதனை அடைகிறது.

வால்பாறையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல
40 கொண்டை ஊசி வளைவு கடந்து 64 கிலோ மீட்டர் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆகிறது இதனால் உடல்நல குறைவாக இருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றன. அவர்களுக்கு மேலும் நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு பண விரையமும் நேரம் விரையமும் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் மருத்துவ துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வால்பாறை அதற்கு எதிர்மறாக பொதுமக்கள் அரசை குறை சொல்லும் அளவிற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிகிச்சை பார்ப்பதற்கும் போதிய வசதிகள் இல்லை. ஒரு சில நேரங்களில் மரணமடைந்தாலும், உடல் ஆய்வு கூறு செய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தார்கள்.

அந்த இடத்தை ஆய்வு செய்த மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர், இனிமேல் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், வால்பாறை பகுதியில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் தரமான சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களும் ஊழியர்களும் மருத்துவ உபகரணங்களும் வாங்கி தர வேண்டும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் தனக்கு ஏடுப்படும் பிரச்சனைகளை எளிதாக எடுத்துக் கூறுவதற்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் நியமிக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp