தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பிரிவு சார்பில் சித்த மருத்துவ முகாம் சித்த மருத்துவர் தமிழண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சித்த மருத்துவ முகாமில் வாசகர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என சித்த மருத்துவர் தமிழண்ணன் வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் இயற்கை யோகா மருத்துவர் ஜனார்த்தனன் கலந்துகொண்டு மூச்சு பயிற்சி மற்றும் இயற்கை உணவுகள் சர்க்கரை அளவுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நூலகர் மற்றும் வாசகர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நூலகர் சுமித்ரா, நூலகப் பணியாளர் ராஜலட்சுமி, யோகா உதவியாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.