தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சி ஐ டி யு சங்கத்தின் சார்பாக வேலை செய்யும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பை உறுதி செய்திட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வால்பாறையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
இயக்கத்திற்கு வால்பாறை கிளையின் தலைவர் டிரைவர் ராஜா அவர்கள் தலைமையில் நடத்துனர் இஸ்மாயில் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட போக்குவரத்துக் கழக சி ஐ டி யு சங்கத்தின் பொதுச்செயலாளர் P.பரமசிவம் பேசுகையில் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் ஓட்டுநர் நடத்துனர் பணிமனை ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவதை கண்டித்தும் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கி பேசி முடிக்க கோரியும் போதுமான பணியாளர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பிட கோரியும் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையினை அரசு வழங்கிட வேண்டும் என்றும் மேலும் பல வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மேலும் அரசு அறிவித்த சம்பளம் இன்னும் வழங்கவில்லை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் குறைவான போனஸ் அடிப்படை வசதிகள் இல்லை அதே போல வால்பாறை பகுதிகளுக்கு பாதுகாப்பற்ற பழமையான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஓட்டுநர் மற்றும் நடத்தினருக்கு பாதுகாப்பு இல்லை.
மேலும் பொதுமக்களும் பாதுகாப்பு இல்லை பேருந்து சரியாக இயங்கவில்லை என்றால் பொதுமக்கள் ஓட்டுநர் நடத்தினிடமும் சண்டை போடுகிறார்கள் நிர்வாகமும் மலைப்பகுதி என்று பார்க்காமல் சரியான தேவையான உறுதியான உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை ஒரு சில பேருந்துகளில் ஓட்டுநர் தனது சொந்த கை காசு போட்டு பழுது ஏற்படும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் அவல நிலை ஏற்படுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகம் மலைப்பகுதியில் பாதுகாப்பான பேருந்தும் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் பேருந்து வசதிகளையும் செய்து தர வேண்டும் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கு வழங்க வழங்கக்கூடிய புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் தற்பொழுது ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும் சாமானிய மக்களின் மற்றும் அரசு ஊழியர்கள் குறைகளை நேரம் காலம் பார்க்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்வது சி ஐ டி யு சங்க நிர்வாகிகளின் முக்கிய வேலையாகும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கிளை 1 கிளை 2 சேர்ந்த நிர்வாகிகளும்
போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வால்பாறை தோட்ட சங்க நிர்வாகிகள் பொள்ளாச்சி போக்குவரத்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி வால்பாறை அக்கா மலை பேருந்து நிறுத்தம், காந்தி சிலை பேருந்து நிறுத்தம், வால்பாறை கிளை முன்பும் நேற்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.
-சுரேஷ்குமார்.