ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!!

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இருப்புப்பாதைகளில் ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை அகற்றும் பணி நிறைவடைந்ததால் ஐந்து நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் குன்னூர் இடையேயான போக்குவரத்து சீரானது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரெயில் போக்குவரத்து 4 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp