தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் கடந்த 25-ந்தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிகட்டிடம் மற்றும் நிழற்குடையை சண்முகையா எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமாண இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த செய்தி நாளிதழில் இவர்கள் இருவர் இருக்கும் புகைப்படத்துடன் வெளியானது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் ஆதரவாளரும் ஓட்டப்பிடாரம் தி.மு.க சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான ஏ.கே.எஸ்.கண்ணன் இந்த பத்திரிக்கை செய்தியில் உள்ள இளையராஜாவின் புகைப்படத்தை மட்டும் மறைத்து அகற்றிவிட்டு பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இதற்கு ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜாவின் ஆதரவாளரும் புதூர் பாண்டியாபுரம் திமுக கிளைச் செயலாளருமான மாரிஸ்குமார்(30), ஏ.கே.எஸ். கண்ணனிடம் தொலைபேசியில் புகைப்படம் மறைக்கப்பட்டது குறித்து கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏ.கே.எஸ் கண்ணன் உள்பட இருவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த திமுக கிளை செயலாளர் மாரிஸ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மாரீஸ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.கே.எஸ்.கண்ணன் உள்பட இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஓட்டப்பிடாரத்தில் பெரும் பரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.