தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பேருந்து நிலையத்தின் அவல நிலை கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரிக்கு செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் அருகில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு இன்னும் செயல்படாமல் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு திமுக அமைச்சர்கள்,திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் என ஆளும் கட்சியை சேர்ந்த பலர் உள்ளனர்.
அனைவரும் இருந்தும் இந்த ஓட்டப்பிடாரம் பேருந்து நிலையத்தின் அவல நிலையை யார் சரி செய்வது? எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே இந்த நிலைமை என்றால்..தொடர்ந்து மழை பெய்தால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதற்கோ பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும்.
ஒன்று பேருந்து நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது புதியதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பேருந்து நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும்குரல் கொடுத்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தை சீர் செய்து கொடுக்க வேண்டும் என அனைவரும் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.