கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள உடும்பஞ்சோலை தாலுகாவில் ரமேஷ் மற்றும் கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். ரமேஷின் வீடு தமிழ்நாடு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ளது. தீபாவளி கொண்டாடுவதற்காக ரமேஷ் மற்றும் கிருஷ்ணவேனி குடும்பத்துடன் போடிநாயக்கனூர் வந்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
நான்கு நாட்கள் அங்கு தங்கிய நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டை நீண்ட நேரம் வலுத்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி கணவன் ரமேஷ் கீழே தள்ளியுள்ளார் கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் ரமேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலையில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு கடந்த சென்று விட்டார். போடிநாயக்கனூரில் ரமேஷின் வீட்டில் இறந்த நிலையில் போடிநாயக்கனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சடலம் மீட்கப்பட்டது.
சடலத்தில் அதிகமான காயங்கள் இருந்ததால் உடனடியாக உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ரமேஷ் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் மனைவியே தன் கணவனை கொன்றது அம்பலமானது. உடனடியாக கிருஷ்ணவேணியை போடிநாயக்கனூர் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் ஆகி 19 வருடம் ஆகி இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.