நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப் படுகிறது. தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்தினால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இது போன்ற தீக்காயங்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் சிறப்பு தீக்காய வார்டு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் கூடிய தீக்காய சிறப்பு வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.