கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது. இந்த கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் வியாபாரம் முடிந்தவுடன் கடையை மூடி சென்றுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் மீண்டும் வந்து கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைக்கண்ட மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் சுமார் 200 சவரன் நகைகள் வரை கொள்ளையடிக்கப் பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக கடை முழுவதும் நடத்திய சோதனையில் ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் தொடர்ந்து நகைக்கடையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.