தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் கடந்த அக்டோபர் 1 ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பனை வாரியம் , தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழக கடற்கரைகளில் ஒரு கோடி பனைவிதை நடவு செய்து உலக சாதனை நிகழ்வை நடத்தியது.
தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் தூத்துக்குடி தருவைக்குளம் மன்னார்வளைகுடா பூங்கா கடற்கரையில் 30,000 பனைவிதை நடவுப்பணியை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுந்தரராஜன் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை ( கூட்டமைப்பு) மற்றும் தருவைக்குளம் ஊராட்சி சார்பில் தருவைக்குளம் கடற்கரையில் 3,000 பனைவிதைகள் நடவுப்பணி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தருவைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் கா.காடோடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் நவமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிரி , தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவன தலைவர் எம்.ஏ.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதை நடவுப்பணியை துவக்கி வைத்தனர். ஊராட்சி பணியாளர்கள், கிராம மக்கள், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பனை விதை நடவுப்பணியை மேற்கொண்டனர். நிறைவாக பணித்தள பொருப்பாளர் சில்வர் ஸ்டார்மேரி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி