குளத்தூர் தெற்கு பனையூர் இந்து நாடார் நடு நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா வெகு சிறப்பாக நடை பெற்றது. தலைமை மாணிக்கராஜ் தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வேப்பலோடை முன்னிலை சரளா வட்டாரக் கல்வி அலுவலர் வரவேற்புரை &நன்றியுரை காந்திக்கனி, தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியை.
விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி,கதை சொல்லுதல் போட்டி என போட்டிகள் நடை பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம் பள்ளிச் செயலாளர் ரா. ஆதி மாரிஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.
ச. மாணிக்கராஜ் அவர்கள் பேசும் போது போட்டித் தேர்வை மாணவர்கள் எவ்வாறு சந்திப்பது, எப்படி தேர்வை எதிர்கொள்வது என்பது பற்றியும் கல்வியின் அவசியம் பற்றியும் அருமையாக எடுத்துக்கூறினார். பள்ளித் தலைமையாசிரியை மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.
மாணவர்கள் நடனம், பாடல், கவிதை, பட்டிமன்றம், நாடகம், என்பனவற்றின் மூலமாக தமிழ் மொழியின் சிறப்பை பற்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள் .பள்ளித் தலமையாசிரியை அ. மரிய அனிதா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து தமிழ் இலக்கிய மன்ற விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.