போத்தனூரில் பாதாள சாக்கடை பணிக்காக, வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குறிச்சி — குனியமுத்தூர் பகுதிகளில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி, இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதன் ஒரு பகுதியாக, கடந்த 7ம் தேதி முதல், 300 மீட்டர் தொலைவிற்கு போத்தனூர் சர்ச் ரோட்டில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது.
இதையடுத்து இவ்வழியே வெள்ளலூர், செட்டிபாளையம் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் குறிச்சி பிரிவு, சுந்தராபுரம், சாரதா மில் சாலை வழியே போத்தனூருக்கு வருகின்றன.
இலகுரக, இரு சக்கர வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள பாதை மற்றும் உமர் நகர், காந்திஜி ரோடு வழியே சாரதா மில் ரோட்டிற்கு வந்து, வெள்ளலூர், செட்டிபாளையம் செல்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால், 300 மீட்டர் தூரத்திற்கு பதிலாக சுமார், நான்கு முதல் ஆறு கி.மீ., தூரம் பயணிக்கவேண்டிய நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, காந்திஜி ரோடு -மற்றும் குருசாமி பிள்ளை வீதி ரோடு ஆகியவை, சாரதா மில் சாலையில் சந்திக்கும் இடங்களில், வாகனங்கள் திரும்புகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார் அவ்விடத்தில், வாகனங்களை ஒழுங்குபடுத்தினாலும், சில நேரங்களில் நெரிசலை தவிர்க்க முடிவதில்லை.
இதுகுறித்து, பணி மேற்கொள்ளும் எல் அண்ட் டி நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, ‘முதல் இரு நாட்கள் மக்கள் இவ்வழியே வந்ததால், பணி செய்வதில் இடையூறு ஏற்பட்டது. தொலைதொடர்பு நிறுவனத்தார் கேபிள்களை அகற்ற தாமதித்தனர்.
தொடர்ந்து மிக கடினமான பாறை வந்ததால், அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இரவு, பகலாக பணி மேற்கொள்ளப்படுகிறது. நாளை (இன்று) இரவுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும்’ என்றார்.
இப்பணி முடிந்த பின், அவ்விடத்திலுள்ள மண் குவியல் முழுமையாக அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்படவேண்டும்.
அப்போதுதான் வாகனங்கள் எந்தவித பிரச்னையுமின்றி சென்று, வர முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மட்டும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.