சான்டியாகோ: ஜூனியர் பெண்களுக்கான 10-ஆவது உலகக் கோப்பை ஆக்கி போட்டி, சிலியில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் குரூப் “சி’-யில் இடம் பிடித்திருக்கும் இந்தியா, முதல் ஆட்டத்தில் கனடாவை இன்று சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.