ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் சுமார் 2000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோள பயிர் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் மக்காச்சோள பயிரில் தற்போது படைப்புழு தாக்கம் ஆங்காங்கே தென்படுகிறது. மேலும் இப்பயிரை மானாவரி பகுதிகளில் விதைக்கும் போது வரப்பு பயிராக நான்கு வரிசை நாற்று சோளமும் தோட்டக்கால் பகுதிகளில் நான்கு வரிசை தட்டைப்பயிறு சூரியகாந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் விதைக்க வேண்டும். தோட்டக்காலில் ஊடு பயிராக உளுந்து பாசி சாகுபடி செய்யலாம் ஒரு வாரத்தில் இலையின் மேல் அல்லது கீழ் புறம் காணப்படும் முட்டை குவியல்கள் இளம் புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒரு ஹெக்டேருக்கு 12 இன கவர்ச்சி பொறிகளை வைக்கலாம்.
பயிர் முன் குருத்துப் பருவத்துக்கு வந்ததும் படைப்புழுவின் தாக்குதல் தென்பட்டால் குளோரான் டிரினிலிடிரோல் நான்கு மில்லி அல்லது அசாடிடிராக்டின் 50 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இளங்குறுத்து பருவமான 35 முதல் 40 நாட்கள் பயிரில் படை குழுக்கள் இருந்தால் மொட்டரைசியம் அனிசோபிலோ என்பது கிராம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குருத்துப்பருவத்தில் அதாவது 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை தென்பட்டால் எமாமெக்டின் பென்சோயட் நான்கு கிராம் அல்லது நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பினோடோரம் 5 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் தென்பட்டால் குருத்து பருவத்தில் தெளிக்காத மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி புழுவை கட்டுப்படுத்தலாம். அதிக மகசூல் பெற வேளாண்மை துறை பரிந்துரைத்துள்ள மேற்கொண்ட மருந்துகளை மட்டுமே விவசாயிகள் உரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலாய் பெர்னாண்டோ விளக்கம் அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.