கோவை மாநகரம் ராமநாதபுரம் சிக்னல் அருகே சாலையோர மரம் முறிந்து அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு. கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ். இவர் ராமநாதபுரம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிக்னல் அருகே சாலையின் இடது புறமாக இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த அவர் உயிர் தப்பினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் சாலை அமைப்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற மீட்பு பணி துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது. சாலையோரத்தில் இருந்த அந்த மரம் பட்டுப்போன நிலையில் இருந்ததாகவும், மழையில் காரணமாக ஊறிப்போனதால் முறிந்து விழுந்திருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். எனவே அபாயகரமான நிலையில் இருக்கும் மரங்களை அதிகாரிகள் கண்டறிந்து அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.