கோவை: ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் செ. ஹைதர் அலி அவர்களின் அறிவுறுத்தலின்படி (நேற்று 26.11 23) கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவியின் பெற்றோரை சந்தித்து கோவை மாவட்டIMMK நிர்வாகிகள் பேசினார்கள்.
கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவியை, ஆசிரியர் அபிநயா தன்னுடைய ஷூவை துடைக்க வைத்தும், மாட்டுக்கறி சாப்பிடும் உனக்கு இவ்வளவு திமிரா என்று மற்ற மாணவர்களுக்கு மத்தியில் மன உளைச்சலை உண்டாக்கி, ஒருமையில் பேசியதை தொடர்ந்து, இந்த பள்ளி ஆசிரியர் தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், ஐமுமுக தலைவர் அண்ணன் ஹைதர் அலி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி, அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்தப் பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அரசிடம் வலியுறுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் RM. ரபீக், மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட பொருளாளர் மேக்ஸ் வசீர், துனைசெயலாளர் நௌபல்,மருத்துவரணி இம்ரான் கான்,
ஊடகதுறை நியாஸ்,சத்திய பிரச்சார பேரவை அசார், இக்பால் மற்றும் ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.